×

கொடநாடு மர்மம் குறித்து விவாதிக்க சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்: சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பேட்டி

சென்னை:  மறைந்த பிரதமர் ராஜிவ் காந்திபிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ் காந்தி உருவச் சிலைக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் தலைமையில் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  அதை தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜிவ் காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிகளில், துணை தலைவர்கள் தாமோதரன், வாழப்பாடி ராம சுகந்தன், டி.செல்வம், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், நாஞ்சில் பிரசாத், அடையார் டி.துரை, மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, முன்னாள் மாவட்ட தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன், திருவான்மியூர் மனோகரன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், ‘‘கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் மர்மமாக உள்ளது. கொடநாடு மர்மத்தை விவாதிக்க விதி எண் 55ன் கீழ் சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது” என்றார்….

The post கொடநாடு மர்மம் குறித்து விவாதிக்க சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்: சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Legislative Congress Party ,Chennai ,Rajiv Gandhi ,Tamil Nadu Congress ,Chinnamalai ,Saidapet, Chennai ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...